அபி உலகம் -6தாத்தாவும் அபியும் பூங்காவில்...


"சறுக்குமரம் போறியாம்மா?"
"நம்ம தெருவிலே இருக்கே

  

அது என்ன?"
"அது வேப்பமரம்.. "
"தோ...அது... "
"அரசமரம்டா..
அந்தப்பையன் இறங்கிட்டான்...
வாம்மா..."
"இந்த மரத்துல
ஏன் எல(இலை) இல்ல..?"
அன்றுதான் தாத்தா
சறுக்குப்பலகை
சொல்லப்பழகினார்...
***************************
தன் ரயில்
கவர்ச்சி வண்ணங்களில்
இல்லாத ரயிலை
அபி ரயிலென்று ஏற்கவில்லை!
ரயில் மந்திரி முகவரியோ,
ரயில் பொம்மை செய்பவர் முகவரியோ
தேடுகிறார்
அபி அப்பா -முறையிட ...
***************************

கருத்துகள்

கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
பதில் சொல்ல முடியாத கேள்வி. தாத்தாவுக்கே ஆசானாகி விட்டாளே அபி!
அபியின் உலகத்தைக் கவிதை வடிவில் சிருஷ்டிக்கும் விதம் அழகு!

பாராட்டுக்கள் உமா! (மேடத்தை நீக்கி விட்டேன்; நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டுமென வேண்டுகோள்!)
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
அபிக்களிடம்தான் நாம் கற்கிறோம்..அபியின் இன்னொரு பெயர் சிந்துவாகவும் இருக்கலாம் ..நன்றிப்பா !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்