பௌர்ணமி எனது நாளல்ல....

தேர்ந்த பாடகியின் 
பழகிய தம்புரா போல் 
பழைய ஜன்னல் 
வளைவு போல்,
புதிய கைப்பிடிச் சுவர் போல் ,
என் 
குட்டித் தலையணை போல்,
பிரபஞ்சப் பயணத்தின்
பிடிமானம் போல் 
பற்றிக்கொள்ளவும் 
சாய்ந்து கொள்ளவும் 
துண்டு நிலாவே 
தோதானது.

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமை.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
ராம்கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்று. பிறை வானின் புதிய பார்வை அட, போட வைக்கிறது. ஒரு கவிதைக்கு ஓரளவுக்கேனும் சரியா புகைப்படம் போட்டுவந்த நீங்க இப்போ அதிலும் தேறிட்டீங்க!!. வாழ்த்துக்கள். என்னவோ நேற்று இரவு படித்தது, இதோ இக்காலை வரை நீங்க மறுக்கிறது. அது எப்படியோ, ஒரு சில கவிதைகள் மட்டும் அதன் முழு வாக்கியங்களோடு உடனே ம்னதில் புடம்போட்டுவிடுகிறது. இப்போது கேட்டாலும், மனப்பாடமாய்ச் சொல்வேன். வாழ்த்துக்கள். தோழர்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராம்கோபால்.ஒருவகையில் நாமெல்லோரும் பிறைநிலாப் பித்தர்கள்தானோ ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை