உன்னோடு போனது துக்கம்எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும் 
எந்தச் சாவிலும் மாரடிக்கவும் 
முன்னே முன்னே போகும் 
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்... 
சாராயக் காசு வாங்க 
ஆளில்லாக் கவலையில் 
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது 
பொசுக்கென்று போன கவலையில் 
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி 
போட வேண்டாமென 
அழுகையை ஒத்தி வைத்தது 
தெரு சனம்..


கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
யதார்த்தமான நடக்கும் சம்பவம்...

மனம் ஏனோ வருத்தப்பட்டது...
www.sramgopal.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
இதுதான் இயல்பு. ஒரு யதார்த்த விஷயத்தை கவிதையாக்குவது உங்களுக்கு மிக கைதேர்ந்த கலையாகி வருகிறது. வாழ்த்துக்கள். உங்களுக்கு தெரியுமா? ஈரோடு பகுதிகளில் பெரிய காரியம் என்றால் சாவு, சிரிய காரியம் என்றால் திருமணம் .
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தனபாலன் .
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கோபி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்