சனி, ஆகஸ்ட் 25, 2012

வாழ்வின் தருணங்களை எழுப்புதல்



ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு 
வர்த்தக வளாகம் 
எது வேண்டுமானாலும் 
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப் 
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்                   
கோலாகலத் தோரணங்களை 
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும் 
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய் 
யார் யார் வாழ்வையோ 
அங்கீகரித்த பொழுதுகள் 
அந்த கிழிந்த திரைக்கு 
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும் 
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில் 
அடக்கம் செய்துவிட்டு 
மூடிக்கிடக்கும் 
பழைய திரையரங்கை 
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன் 
ஒலித்த 
பழைய பாடலின் எதிரொலி 
தொடர்நதால்
பயப்பட  வேண்டாம் 
மணி அடித்ததும் நின்றுவிடும் 

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை.

//பழைய பாடலின் எதிரொலி தொடர்நதால் பயப்பட வேண்டாம் மணி அடித்ததும் நின்றுவிடும் //

அருமை சக்தி.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

கீதமஞ்சரி சொன்னது…

பழைய பாடலை ஒரு சங்கேத அடையாளமாய் ஒலிக்கவிட்டு திரைப்படம் துவங்கிய காலகட்டத்தை, ஏக்கமாய் நினைவுகூறும் அருமையான கவிதை. பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

ஆம் கீதா மறக்க முடியுமா அந்த நாட்களை..நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...