சனி, ஜூலை 21, 2012

ஆடுகளம்


    
தொடக்கத்தில் 
பரத புஷ்பாஞ்சலி ,
பின் 
சற்றே கதகளி
கொஞ்சம் மோகினியாட்டம் 
அதன்பிறகுதான்...
அற்புதம்.
பறந்து பறந்து 
பாலே ....
தாவியும் ,மிதந்தும் 
அலைந்துவிட்டு ,
இப்போது 
கம்பியைப் பற்றி உந்தி 
முகம் பதித்துத் 
தொங்கிச் சிரிக்கும் 
சிறுவனாகி விட்டது 
யாரோ கட்டி,
அறுந்து ,
மிச்சமிருந்த கட்சித் தோரணம்.

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா.. ஹா நல்லா இருக்குங்க..

கீதமஞ்சரி சொன்னது…

விதிகளுக்கற்பாற்பட்ட விளையாட்டுக் களிப்புமிகுச் சிறுவனைக் கண்முன் ஆடவிட்டது கவிதை. பாராட்டுகள் சக்தி.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை சக்தி.

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழரே

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா

உமா மோகன் சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி

Revakisvary சொன்னது…

Katchi kodiyo... katchi thondano...
iruvarume samam thaan..
kootam mudiyum varai

உமா மோகன் சொன்னது…

ஆம் ரேவகிச்வரி ...ஆட்டம் முடிந்தபின் ஓட்டம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...