செவ்வாய், மே 28, 2013

பெரிது ஏலா வாழ்வு

நீ  அமர வாய்ப்பிலாச்
சிறிய இதழ்களோடு
நான் இன்று சிரிக்கிறேன்...
நீ
மேலும் சில நாள் தவிக்கலாம்..

.
சிறு சிறகுகளோடு
ஒரு பூச்சியோ தேனீயோ
அலையக்கூடும் 


நகர்கிறாயா ..


நிழலிலேயே மரிக்க
எனக்கு சம்மதமில்லை...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பர்...!

கீதமஞ்சரி சொன்னது…

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்கும் கொக்கிடம் வாழ்க்கைப்பாடம் கற்கவேண்டும் வண்ணத்துப்பூச்சி. அர்த்தம் பொதிந்த கவிதை. பாராட்டுகள் சக்தி.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...