அன்பு ஒரு துளி
ஆசை ஒரு துளி
சினம் ஒரு துளி
வருத்தம் ஒரு துளி
அறிவு ஒரு துளி
கயமை ஒரு துளி
காதல் ஒரு துளி
கற்பனை ஒரு துளி
காமம் ஒரு துளி
வேகம் ஒரு துளி
விவேகம் ஒரு துளி
ஞானம் ஒரு துளி
மடமை ஒரு துளி
ஊக்கம் ஒரு துளி
சோம்பல் ஒரு துளி
முயற்சி ஒரு துளி
வக்கிரம்,உக்கிரம்,
தயை ,தாராளம் ,
இரக்கம் .....ஒருஒரு துளி
......
என்ன ஆயிற்றா ?
இன்னும் கொஞ்சம் விடலாம் "
"விடு..விடு..எதையாவது விடு ...!"
.......
அவன் கைக் குடுவையே
நீ..நான்....
1 கருத்து:
அனைத்து துளிகளும் அருமை... சில துளிகள் துளிகளாக இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக