செவ்வாய், அக்டோபர் 08, 2013

உன்னை எனக்குத் தெரியாதே

பார்த்ததுபோல் இருந்தாலும்
பாராதுதான் போனேன்...


"நில்'...நின்றேன்...
"பாராது போகிறாயே.".
"உன்னை ...பார்த்ததில்லையே."..
"எல்லாம் அறிந்த முகம்தான் ..."
அம்ஹம்...
உறவா..நட்பா...
"மன்னிக்க வேண்டும்...நினைவுக்கு
வரவில்லை.."
"தெரிந்துகொண்டே தெரியாது என்பது....."
"தயவு செய்து நொடிக்காதே ...
அ ....  ஏதாவது குறிப்பு தரக் கூடாதா...
எங்கே பழக்கம்...பார்த்தது எப்போது ...ஏதாவது..."
"உண்மையில் தெரியவில்லையா..."
"உண்மையாய்த் தெரியவில்லை.."

"பொய்யையே பார்த்துப் பார்த்து
பொய்யுடன் பொய்யாய் கலந்து
உண்மையையே
அடையாளம் மறந்து போனதோ..."

உண்மைதானா என்ற
தயக்கத்துடன் நிற்கிறேன்...
அடையாளம் தெரிந்தவர் யாரும்
இருக்கிறீர்களா...

2 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

இந்த மாதிரி பல ஆண்டுகள் முன்பு பார்த்தவர் நேரில் நின்று தெரிகிறதா என்று கேட்டபோது விழித்து நிற்க அவர் கோபத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்துச் சென்றது நினைவுக்கு வருகிறதுஅனால் இங்கு உண்மையையே அடையாளம் தெரியாமல் தெரிந்தவர் உளரா என்று கெட்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. உங்கள் உள்ளத்துக்குத் தெரியவேண்டுமே. .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்...

அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...