சனி, டிசம்பர் 14, 2013

உறைந்த காலம்

வல்லமையில் நேற்று  13 12 13

உதிர்த்த சொற்களில்
நீ நின்றாய் ..
உரைக்காத சொல்லில் நான்…
என் உச்சரிப்பு குறித்து
கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…
மௌனத்தில் நடமிட்ட
பொழிவை கோர்க்க இயலவில்லை
என்னால் …
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்
கூட்டுப் புழுவின் வரிகள்
என்னாயின ..
ஒருமுறை கேட்டிருக்கலாமோ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி சொன்னது…

கேட்டிருக்கலாம்... கூட்டுப்புழுவை வண்ணத்துப்பூச்சியாக்கும் எண்ணமிருந்தால் சொற்கள் உதிர்க்கப்பட்டிருக்கும். உறைந்த காலக் கவிதையில் உறையும் பொருள் வியக்கவைக்கிறது. பாராட்டுகள் உமா.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...