வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... நம்பிக்கையோடு....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

mohamedali jinnah சொன்னது…

ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு விதத்தில் சிறப்பு
ஒவ்வொன்றாய்
ஒவ்வொரு நாளும்
படித்து ஆய்வு செய்ய வேண்டும்
ஒவ்வொன்றையும் மனதில் நிறுத்தி கற்க வேண்டும்

உமா மோகன் சொன்னது…

மிக நன்றி சகோ

உமா மோகன் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் தோழரே மிக்க நன்றி .இக்கருத்து விடுபட்டுவிட்டது போல இப்போதுதான் பார்த்தேன் மன்னிக்கவும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...