அச்சத்தின் துளிகளால்
எனது பெருங்கடல்
தளும்பிக்கொண்டிருக்கிறது.
எப்போதும் வறண்டுபோகும்
வாய்ப்புடன் அமுதம்
ஒரு குட்டையில் ..
அமுதம்
பருகக்கூடிய வாய்ப்பை
அலையாடிக் கொண்டிருக்கும்
கட்டுமரத்தின் திரைச் சீலையில்
முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன்
திறப்பேன் என்கிறான்
அங்கே தூண்டிலோடு
திரியும் கிழவன்.
எனக்கோ அவன் தனது
ஓட்டைக் குவளையில்
நிரப்பியது போக மீதமிருப்பது
அமுதக்குட்டையின் கானல் நீரே
என்றஎண்ணம்.
கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது
அசைவின்றித் தூண்டிலோடு
குந்தியிருக்கிறான் கிழவன்
2014 ஆகஸ்ட் 11 திண்ணை இணைய இதழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக