நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
அதானே? பார்த்துக்கொண்டிருக்கும்போதே பச்சைத்தண்ணீர் குடித்து வளர்ந்த படிக்கட்டைப் பார்த்து வியக்கத்தானே வேண்டும்? புதுப்பணக்காரர்களைப் பார்த்துப் பொருமும் பழைய பணக்காரனை நினைக்கவைத்தது கவிதை. பாராட்டுகள் சக்தி.
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தின்றி கொப்பின்றி விடுவிடுவென வெறும் பச்சைத்தண்ணீர் குடித்து வளர்ந்த படிக்கட்டு கண்டு பக்கத்துச் செடிகள் வியந்துபோவதில் வியப்பென்ன?

புதுப்பணக்காரனின் வளர்ச்சி கண்டு பழைய பணக்காரன் பொருமுவது போலவும் மின்னி மறைகிறது ஒரு கணம். பாராட்டுகள் சக்தி.

நேற்று நான் இட்டுக் காணாமற்போனப் பலப் பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. :(
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் கீதா .நானும் தேடினேன்.
வருகைக்கு நன்றி
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
என் முதல் பின்னூட்டமும் பதிவாகவில்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை