கனவின் சிறகுகள்ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
/பின்னிய கரங்களின்
விடுவிப்புக்காகவோ,
சிறகுகளின்
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன/

உலகம் அப்படியானதே.

நிச்சயம் வனம் சேருவாள். அருமையான கவிதை.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
பெண்ணின் விடுதலை சில காத்திருப்புகளால் நிராகரிக்கவும்,நிர்ணயிக்கவும் படுகிறது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்