வியாழன், ஏப்ரல் 05, 2012

பதின்பருவம் உறைந்த இடம்



2 4 12 திண்ணையில் வெளியான கவிதை

இயலுமானால்                                                                             
சுவர் அலமாரியின் 
இரண்டாம் தட்டை 
இடிக்காமல் விடுங்கள் ...
 
உடைந்த மரப்பாச்சி,
கறுத்த தாயக்கட்டைகள்,
தொலைந்த சோழிக்கு மாற்றான 
புளியங்கொட்டைகள்,
ஆத்தாவின் சுருக்குப்பை,
ஜோடியோ திருகோ
தொலைந்த காதணிகள்,
அறுந்த  பிளாஸ்டிக் மாலை 
கோர்க்கும் நரம்பு ,
கல்யாணமாகிப்போய்விட்ட 
நிர்மலா தந்துசென்ற 
கமல் படம் ....
எதுவுமே காணாவிடினும் 
காண்பதுபோல் 
கண்டுகொள்ளமுடியும் 
இரண்டாம் தட்டு இருக்குமானால்...
                                                        

4 கருத்துகள்:

ஞா கலையரசி சொன்னது…

தூக்கியெறிய மனமில்லாது அலமாரி யில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் உடைந்த பொருட்கள், பசுமையான நினைவுகளைப் புதுப்பிக்கும் பொக்கிஷங்கள் ஆயிற்றே!
திண்ணையில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள் உமா!

உமா மோகன் சொன்னது…

நன்றி கலையரசி. பொக்கிஷங்களைப் போற்ற வேண்டியவை
என்று அறியாமலே தொலைத்துவிட்டு பின் வருந்தும் மனதின் தவிப்பு அது

கீதமஞ்சரி சொன்னது…

பிள்ளைகளின் சேமிப்பைக் காணும்போதுதான் புலப்படுகிறது, அன்று அம்மாவுக்கு உண்டான எரிச்சலின் காரணம். காரணம் புரிந்து எரிச்சல் துறந்து அமைதியாகிறது மனம் இன்று. நாளை அவர்களும் எழுதலாம் இதுபோலொரு கவிதையொன்று. பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

அர்த்தமற்ற குப்பையாக நாம் நினைப்பது யாருக்கோ
பொக்கிஷம் இல்லையா கீதமஞ்சரி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...