"முடிசூடா மன்னர்"


என்னுடைய கிரீடத்தை 
நீங்கள் 
பார்த்திருக்கிறீர்களா ?
பரம்பரையாய் 
ஆகிவந்தது.
ரசனையில் தேர்ந்தவன் 
செய்தது ....
நுணுக்கமான வேலைகள் ...
நல்ல பசும்பொன் 
நவமணிகள்...
என் ராசிக்கேற்ற 
பெரிய கோமேதகமும் உண்டு..
சரியான கனம்!
அப்புறம் ஒன்று ....
இந்த ...பெட்டிக்கடை பாக்கி 
தீர்க்க 
முன்னூறு ரூபாய் கிடைக்குமா?
 
அடுத்த மாதம் திருப்பிவிடலாம்.

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
பரம்பரைப் பெருமை பேசும், நொடித்துப்போனவர்களின் குரலாய்க் காண்கிறேன். வேறு மறைபொருள் இருந்தால் விளக்கவும். முடிசூடா மன்னர் - தலைப்பு வெகு பொருத்தம். பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் கீதா..பழம்பெருமை தவிர மிச்சமில்லா வாழ்க்கையின் முள்கிரீடம்தான்
நன்றி
கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு காலத்தில் பணக்காரர்களாயிருந்து தரித்திரம் தலை விரித்தாடும் குடும்பங்களில் நிகழ்கின்ற அனுபவம் கண் முன்னே விரிகிறது. பாராட்டுக்கள் உமா!
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும் நன்றி கலா

வாழ்க்கையின் விரிவோ பதிவோ கவிதை ,.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை