இடிந்த வாசல்


புதன், டிசம்பர் 14, 2011

மீள் பகிர்வு 


காலம்கடந்து நிற்கும்                                         
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வரிகளில் வலி தெரிகிறது...
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர்
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
அவசரயுகத்தின் அவதியில் சிக்கி சிதைவுறும் பல வாழ்க்கைகளைப் பார்த்திருக்கின்றன எத்தனையோ வீடுகள். இங்கே சாலை விரிவாக்கத்தால் சிதைந்துபோயிருக்கும் வீட்டின் நிலையோடு நிலையிலா வாழ்க்கையைச் சித்தரிக்கும் கவிதை மனம் தொட்டது. பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி கீதமஞ்சரி
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்வின் அவலத்தை முழுமையாக
உணர முடிகிறது
மனம் சிதைத்துப்போகும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி ரமணி சார் உங்கள் பகிர்வுக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்