புதன், செப்டம்பர் 26, 2012

MY SONG...MY STORY...2





அவன் பாடிய 
அந்த இரு பாடல்களையும்,
உரக்கப்பாடிடவும்,
முடிந்தால்-ஆடவும் 
தீராத ஆவல் கனன்றபடி அவன்....
ஒரு குத்துப்பாடலும்,ஒரு கானாபாடலும் 
பாடிப் பிரபலமடையாதிருந்த 
அவனை 
நீங்களும் அறிவீர்கள் ..
பிரமாதமான பக்திப் பாடகனாக ...
எந்த மேடையிலும் ,
தன விருப்பமாகவோ,
நேயர் விருப்பமாகவோ 
தன பாடலிரண்டையும்
பாடவே முடியாது போன 
அவன் 
குளியலறைக்குள் முயன்றபோது 
அதுவும் 
பக்திப்பாடலாகவே தொனிக்கிறது ... 

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக அதிகமானவர்களின் வாழ்வு
இப்படித்தானே கழிகிறது
அனைத்து விஷய்ங்களுக்கும் பொருந்திப் போகிற படிமம்
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படியாவது சந்தோசப்பட வேண்டியது தான்...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...