சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

4 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

இந்தக் கவிதையின் கருவைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்றே எண்ணுகிறேன். திண்மையான கருவினை உள்ளடக்கிய படைப்பென்பதை மட்டும் இப்போதைக்கு உணர்ந்து பாராட்டிச் செல்கிறேன் சக்தி.

உமா மோகன் சொன்னது…

தன்னைத் தானும் உணர்ந்து கொள்ள முடியாமல் சுயம் இழக்கும் பெண்ணின் பிம்பம் சொல்ல
முயன்ற வரிகள் கீதா .இடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி

கீதமஞ்சரி சொன்னது…

விளக்கத்துக்கு நன்றி சக்தி. இப்போது வாசிக்க வரிக்கு வரி மட்டுமல்ல, வரிகளுக்கிடையிலும் புரிந்துகொள்ள இயல்கிறது.

உமா மோகன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி கீதா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...