துரத்தும் தெருநாய்
அபியிடம்
தனியாய்க் குழைய
அம்மா நினைக்கிறாள்
குழந்தைக்கான பரிவு என்று.
அவளுக்குத் தெரியாது
வீட்டின் செல்ல நாய்த்தீனியில்
பாதி
ஜன்னல்வழி வெளியேறுவது.......
**************************
களிம்பும் கையுமாய்
அபி வாசலில்......
வெளுத்த புள்ளிப்புண்ணோடு
கடைத்தெருவில்
காசுவாங்கிய யானையை
அப்பா
எங்குபோய்த் தேடுவாரோ
அபியிடம்
தனியாய்க் குழைய
அம்மா நினைக்கிறாள்
குழந்தைக்கான பரிவு என்று.
அவளுக்குத் தெரியாது
வீட்டின் செல்ல நாய்த்தீனியில்
பாதி
ஜன்னல்வழி வெளியேறுவது.......
**************************
களிம்பும் கையுமாய்
அபி வாசலில்......
வெளுத்த புள்ளிப்புண்ணோடு
கடைத்தெருவில்
காசுவாங்கிய யானையை
அப்பா
எங்குபோய்த் தேடுவாரோ
4 கருத்துகள்:
அபி உலகம் அலாதியானதுதான். பதினைந்து வருடங்களுக்கும் முந்தைய சின்ன நிலாவின் சேட்டைகளை நேற்றையக் கவிதைகளாக்கியதில் அபி உலகத்துக்குப் பெரும்பங்கு உண்டு. நன்றி சக்தி , நன்றி அபி.
இந்த நிலா நான் பார்க்காத நிலா கீதா
நன்றி
தெருநாய், செல்ல நாய் எனப் பார பட்சம் பார்க்காத, புண் என்றவுடன் களிம்பும் கையுமாக யானையைத் தேடுகின்ற அபியின் உலகம் அலாதியானது என்பதுடன் நேயம் மிக்கதும் கூட. பாராட்டுக்கள் உமா!
வளர வளர நாம் வளர்த்துக்கொள்ளாத நேயம்..இல்லையா கலை..!நன்றி
கருத்துரையிடுக