வெள்ளி, மார்ச் 16, 2012

பாராட்ட வருகிறார்கள்



அவசரமாய் 
 
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
 
சம்பிரதாய வாழ்த்து ,
 
அழுத்தும் கைகுலுக்கல்,
 
பொய்யெனப் புரியும் 
 
புனைந்துரைகள் 
 
எல்லாவற்றுக்கும் 
 
முகநூலின்
 
ஒற்றை விருப்பச் சொடுக்காக 
 
புன்னகைக்கலாமா?
 
பல்....?
 
தலையசைப்பு 
 
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
 
மையமாகவா?
 
கண் பணித்துவிடுமோ...
 
சீரான சுவாசத்தோடு 
 
வெற்றுப்பார்வை தோதாகுமா?
 
பெருமிதம்?கூச்சம்?
 
''எவ்வளவோ பாத்துட்டோம்..?
 
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்....?
 
எது பொருந்தும்....?
 
அவசரமாய் ஒரு கண்ணாடி
 
அல்லது 
 
 ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! 

                                            12 3 12 திண்ணையில் வெளியானது .

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

ஆழ்மனத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ஆவலாதியை அத்தனை எளிதாய் பாசாங்கு செய்து மறைத்துவிட இயலாது. அரங்கேறும் நாளில் ஒத்திகை மறந்து நாட்டியமாடும் அகமும் புறமும்.

வாழ்த்துக்கள் மேடம்.

உமா மோகன் சொன்னது…

ஆம்!அமர்த்தலாய் இருந்தால் அது சர்வ நிச்சய நடிப்புதானே கீதா

மேடம் தவிர்க்கவும்

நன்றி! நன்றி!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...