மே16 சொல்வனம் மின்னிதழில்
திறக்கப்போவதில்லை
என்ற தெளிவின்றிப்
பூட்டப்பட்ட கதவு அது.
யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..
4 கருத்துகள்:
கதவின் நிலையிலிருந்து மனம் கனக்கிறது சக்தி. அந்த வளையம்... அதன் இன்னொரு பயனை இங்கு கண்டேன். அயல்மண்ணில் அலைபாயும் என் கனவுகளிலும் அடிக்கடி வரக்கூடும் இக்கதவும் கவிதையும்.
ஆம் உணர்கிறேன்.கீதா வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
விரல்களின் ஸ்பரிசத்துக்கான ஏக்கம் வளையத்திற்குக் கூட உண்டு என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். கதவில் மட்டுமில்லை சொந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லுக்குள்ளும் நம் ஆன்மா ஒட்டிக்கொண்டு தான் உள்ளது.
நல்லதொரு உணர்வினை வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுக்கள் உமா!
மிக்க நன்றி கலையரசி
கருத்துரையிடுக