காணாமற் போனவன் குறித்து
புகார் தருகையில்
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலததின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலததில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?
சுழலும் கேள்விகளின்
விடை மனதிற் படியாமல்
திறந்த பேனாவோடு
அமர்ந்திருக்கும் தந்தைக்கு
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின்
மை
உலர்ந்து கொண்டிருக்கிறது.
13 கருத்துகள்:
கசிகிறது மனம்.
நல்ல கவிதை சக்தி.
ஆம் ராமலக்ஷ்மி !கசிவின் வெளிப்பாட்டுக்கு உடன் கருத்தைப் பகிர்ந்தீர்கள் நன்றி
வரிகள் நெகிழ வைக்கிறது...
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழர்
எப்படி உறங்குவது இப்படிக் கவிதை எழுதினால்?
ஆம் உறங்கவிடா வேதனைகளை நாம் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறதே...சுந்தர்ஜி
அதுபோக உங்கள் வருகையும் பகிர்வும் எனக்கு எத்தனை நெகிழ்ச்சி தெரியுமா ஏதோ கொஞ்சம் எழுத வருகிறது
போலிருக்கிறதே எனக்கும்...
அதெல்லாம் பெரிய வார்த்தை உமா மோகன்.
உங்களின் சமீபத்திய கவிதைகளில் எல்லாம் மொழி நல்ல வசப்பட்டிருக்கிறது.
வாழ்வின் தருணங்களை எழுப்புதல்(அது ராஜா த்யேட்டர்தானே?), உன்னோடு போனது துக்கம், எழுதப்படாத நாட்குறிப்பின் பக்கங்கள்,விடையிலாக் காட்சி,மாயச் சலங்கை என எல்லாமே.
நேரத்தின் இணுக்குகளில் எழுதவும், வாசிக்கவும் மட்டுமே நேரமொதுக்குகையில், நன்றாக எழுதிவரும் உங்களைப் போன்ற கவிஞர்களின் கவிதைகளைப் பாராட்டி எழுத நேரமின்றி ஓடுவது கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது.
தமிழில் எழுதிவரும் வெகுசில அசலான பெண்குரல்களில் உங்களது மிக முக்கியமானது.
இன்னொரு ”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீரு”க்காக உங்களின் ஒரு கவிதையை என் சட்டைப் பைக்குள் மடித்து வைத்திருக்கிறேன்.
வார்த்தை எழவில்லை. உங்களால் மட்டுமே இப்படி உலர் மனங்களையும் மை உலரும் மணித்துளிகளையும் கவிதையாக்க இயலும். வியப்போடு பாராட்டுகிறேன் சக்தி.
இந்தச் செடியை என் மண் செழிக்க மானசீகமாக உங்கள் அனுமதியுடன் பதியன் இட்டிருக்கிறேன்.நன்றி சக்தி.
மீண்டும் ஒரு சபாஷ். உங்கள் கவிதைகளில் இதற்கு ஒரு தனியிடம் பெருமைக்குரியதாயிருக்கிறது. தொடரட்டும். ஆமாம் வேணுவிற்கு அனுப்பினீர்களா? என்ன சொன்னார்?
கவிதை சோகம் என்றாலும் இந்தக் கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிக மகிழ்வாய் இருக்கிறது
நன்றி கீதமஞ்சரி
உங்கள் சொற்கள் உண்மையில் என் எழுத்துக்கான விருதாகக் கருதுகிறேன் சுந்தர்ஜி
இப்போது துளிர்க்கும் கண்ணீர் உண்மையில் இந்த தந்தைக்காக இல்லை...
கோபி..நீங்களும் வேணுவும் இந்த எழுத்துக்குப் பின்னால் இருக்கிறீர்கள் ...
பதிவிட்ட உடனே தோழரின் பாராட்டு வந்துவிட்டது...
கருத்துரையிடுக