நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் ,
எங்கும் ஒட்டப்பட்டிருந்தது
அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...
முட்டைக் கண்ணன் என்றோ,
தனா என்றோ கூப்பிடப்பட்ட
லதா அண்ணன் அதிலே
தனபால் ஆகியிருந்தான்...
வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள்
லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை,
லதாம்மாதான்
ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை
பறக்கும் தலையும் மூளிக்காதும்,
தாம்புக் கயிறுமாகவேதிரிந்த
லதாம்மாதான்
கொத்துச் சங்கிலியும்
குறிப்பாகப் புன்னகையுமாகச்
சுவரொட்டியில் பார்க்கிறாள்
என்றும் தெரியாமல்தான்
அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித்
துக்கம் விசாரிக்கலாமா ..... 7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக