செவ்வாய், மே 06, 2014

அங்கீகாரத்தின் குரல்


நான் பேசாமல் என்னோடு 
பேசிக் கொண்டிருந்திருக்கலாம் 
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய் 
மட்டுமே புரிந்து கொண்டு 
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

ஒரு அன்னையின் பரிவுடனும் ஆதுரத்துடனும் ஒலிக்கும் வரிகள். எடுப்பாரின்றி ஏங்கி அழும் சொற்களை மறுபடி ஏந்திக்கொள்ளும் வழியற்றுப்போன வாழ்க்கையின் கையாலாகாத்தனத்தை உறைக்கும் கவிதை அற்புதம் உமா.

ramgopal சொன்னது…

வாழ்த்துக்கள். மன்னிக்கவும் தாமதமாய் படித்ததற்கு. ஏங்கி நிற்கும் சொற்களும் குரல்களும் சமூக வீதிகளில் ஆதரவின்றி அலைந்து கொண்டிருக்கிறது பலரிடத்தும், பல இடத்தும்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...