ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா..
பேன்,சிரங்கு பெருமையோட
பழஞ்சட்டை வாசத்தோட
காயும் வயித்தோட
கண்ட வழியோடும்
வறுமைக்குப் பொறந்த மக்கா
இத்தனையும் தாண்டி இத்துப்போன உன் உடம்பு
என்ன தருமுன்னு வந்தான்
வந்தவழி மறந்த நாயி... —
4 கருத்துகள்:
வணக்கம்
கவிதையின் வரிகள் நன்று புனைந்து சென்ற விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புடையீர், வணக்கம்.
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
( S'inscrire à ce site
avec Google Friend Connect)
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக