கட்டைல போறவனே
என யாவரையும் கரித்த
பரமசிவம் தாத்தாவை
நகர
மயானம்
காரில்தான் அழைத்தது.
ஈட்டாத செல்வம்
முகூர்த்த நாள் மரணம்
பூஇறைக்காத
துப்புரவான பயணம் தாத்தாவுடையது
சமைக்க அலுப்பான
ஏதோ ஒரு இரவு போலவே
மயானத்திலிருந்து திரும்புகையில்
பக்கத்துக்கு வீட்டில் நாதஸ்வரமும்
மேசைமேல் பரோட்டா பார்சலும்
"போனா இப்பிடிப் போவணு ம்"
"பொசுக்"கென்று முடிந்த வாழ்வை
எடுத்தபின் வந்த அத்தை
பாராட்டிக் கொண்டிருந்தாள்
குறைந்தபட்சம் -அவளாவது
அழுதிருக்கலாம் இல்லை
சண்டைபோட்டிருக்கலாம் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக