வெள்ளி, ஜூலை 25, 2014

ஒன்றாக என்றால் ஒன்றாக இல்லை

டயர் உருட்டியபடியே 
வாய்ப்பாட்டைத் தப்பாய்ச்சொல்லி 
என்னிடமே குட்டு வாங்கிய 
மண்ணெண்ணெய் வண்டிக்காரர் மகன் ரவி 
ஒன்பதோடு ஒதுங்கி 
மார்க்கெட் தாதா ஆகிவிட்டான்...

இறங்கும் காற்சட்டையை
இழுத்துவிட்டவாறே 
நோட்டு சுமக்கும் துரை 
லாரிஷெட்டில் அண்ணனோடு ..

பின்னலைத் திருகாமல் 
பேசத்தெரியாத வசந்தியிடம் 
சீனிசாரின் பிரம்பு விளையாடியபின் 
அவள் கல்யாணத்தில்தான் 
பார்த்தோம் 
பத்தாம்வகுப்பு பி பிரிவு சார்பில் 
குங்குமச்சிமிழ் பரிசோடு ...

சீதர் என்றே அறியப்பட்ட ஸ்ரீதர்
தப்புக்கணக்கிற்காக  
 மைதானத்தில் முட்டிகசிய 
சுற்றிய நாளிரவு 
பதினைந்து ரூபாயோடு ஓடிப்போனான்...

முன்னாள் மாணவர் சந்திப்புக்கு 
மெல்லவும் ,துப்பவும் தெரிந்து 
மிட்டாயோடு வெளியேறிய 
இருபத்து ஏழுபேர் கூடினால் 
போதுமென்கிறார் 
இப்போதைய தலைமை ஆசிரியரும்......

படம் -இணையம் 

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இதைத்தான் எதிர்பார்த்தேன். கல்வி முறையின் தோல்விகளும், ஆசிரிய மாணவர் உற்வுகளும் கேள்விக்குட்படுத்தியே ஆக வேண்டும். சரியாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

இதைத்தான் எதிர்பார்த்தேன். கல்வி முறையின் தோல்விகளும், ஆசிரிய மாணவர் உற்வுகளும் கேள்விக்குட்படுத்தியே ஆக வேண்டும். சரியாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

ramgopal சொன்னது…

இதைத்தான் எதிர்பார்த்தேன். கல்வி முறையின் தோல்விகளும், ஆசிரிய மாணவர் உற்வுகளும் கேள்விக்குட்படுத்தியே ஆக வேண்டும். சரியாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...