மணிமேகலை அடிவாங்கிய
நாட்களின் மறுநாள்
இட்டிலி உப்புக் கரிக்கும்.
அடுத்தவீட்டு ராணி
சொல்லிய கிசுகிசுக்களின் வாசம்
தோசையில் அடிக்கும்
நங் நங்கென்று நசுக்கப்பட்ட
தேங்காய்க் கீற்றுகள்
முகம் சுளித்து வசவு வீசும்
மாமியின் பற்களே
முறத்திலிருந்து பறக்கும் தவிடு
தன் கவலைபோல் தோன்றுகையில்
புடைக்கும் தாளம் வேகம் பிடிக்கும்
புழுங்கிய நெல் துழாவி
கட்டை வாருகோல் தேயப் பெருக்கி
முடிக்கும் அவளுக்கு
மூவ் தடவி
ஆறுதல் சொல்லும் கணவன்
பூ தைத்த சடையோடு
கண்ணாடிமுன் எடுத்துக்கொண்ட
படம் போன்ற பொய்யே
8.8.15 அதீதம் மின்னிதழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக