சனி, மார்ச் 03, 2012

நழுவிய கணம்


 
பட்டாம்பூச்சி 
வண்ணங்களின் மின்னலாய்ப் 
பறந்தது ஒருகணம்...
பார்த்தது 
பார்க்காது -
ஏழு கடல்,ஏழுமலை,
ஏழுவானம்,ஏழுசூரியன் 
தாண்டிக் கொண்டேயிருக்கிறது 
மனம்.....
தேடல் தொடர்கிறது..
சூரியனின் ஆரஞ்சுச்சாறு ,
வானின் நீலபானம் 
பருகி இளைப்பாறியபடி 
மீண்டும் ,மீண்டும்....
அதே நிறச்சாயல் தேடுகிறது ...
அந்த நிறம் 
அதே நிறமா...
பனியில்,வெயிலில்
இளந்தூரலில்,
பருவங்களின் பாய்ச்சலில்...
கரையாது காணக்கூடுமோ ..
தேய்ந்த  நிறம் தெரியாமல் 
தாண்டிடும் சாத்தியம் 
ஏற்காது.. 
தேடல் தொடர்கிறது..
                               

4 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

தேடலில் நிறைவுறும் வாழ்க்கை இனிக்கிறது, தேடல்கள் நிறைவுறாத போதிலும். அழகான வாழ்வியல் சித்தாந்தம். பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா !தங்கள் வரவும் கருத்தும் நிறைவு...
காணவில்லையெனில் குறையாகத்
தோன்றுகிறது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரட்டும் சகோதரி ! நன்றி !

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழரே.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...