சனி, பிப்ரவரி 25, 2012

உறை(டை)ந்த (ஸ்)வரம்

பழைய கொடிக்கம்பி
எனத்தான் கடந்தேன்..
மின்னிய நிறமும்
மெல்லிய தொற்றமுமாய்
அது
நிழலாகத் தொடர்ந்தது..
நிற்க..இருக்க..கிடக்க..
பார்வையில் படும்படி
கவனமாய் இம்சித்தது...
                                               விரல் நுனியை அழைத்துக்
                  கொண்டே ...
              ஏதோ ஒரு
                            வீணையிலிருந்து 
                               இறங்கிய தந்தியா? 
             வயலின்..?
                       தம்புரா...?           
                                       இன்னும் பெயரறியாக்
                      கருவிகளோடு
                                         பாடல் நாயக/நாயகியர்
                                    தோன்றி மறைய.......
திகைத்து நிற்கிறேன்...
அடையாளம் புரியாச்
சங்கடம் உணராது
என்
கைதொடும் தூரத்தில்
காத்திருக்கிறது அது...


             

5 கருத்துகள்:

Admin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Admin சொன்னது…

"கவிதை பிடித்தது.
மனதில் படும்படி
கவனமாய் இம்சித்தது"

தொடருங்கள்....வருகிறேன.

உமா மோகன் சொன்னது…

நன்றி மதுமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் !

Yaathoramani.blogspot.com சொன்னது…

அதன் பழைய இருப்பின் நிலையை அறிந்தவருக்கு
அது அதிகம் இம்சிக்கவே செய்யும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

உமா மோகன் சொன்னது…

மிகச் சரியாய் இம்சையின் புள்ளியை உணர்த்தியமைக்கு நன்றி ரமணி சார்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...