ஏப்ரல் மாத செம்மலரில் வெளியானது
குழாயடிப் பாத்திரங்கள்
விட்டுப்போன பால்கணக்கு
ஊறும் அரிசி உளுந்து ........
தீர்ந்துபோன வெங்காயம் ,
காலையில் வீசிப்போன
ஒரு வசைச்சொல் ........
ஒவ்வொன்றாக
நுழைந்து
குழுப்படத்திற்கு
இடம்பிடிப்பதுபோல்
நெருக்கியடிக்கின்றன
என்
மேல் இமைக்கும்
கீழ் இமைக்கும் -நடுவே
கருவிழிக்கு சற்று மேலே...
4 கருத்துகள்:
கண்செருகவிடாத காரணங்கள் யாவும் மனம்செருகி நிற்கும் விந்தை. அருமை சக்தி.
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
தூக்கமில்லை மகளே
என்ற திரைப்பாடல் தான் இக்கவிதையை வாசிக்கும் போது நினைவுக்கு வருகிறது.
யுகம் யுகமாய்த் தூக்கத்தைத் தொலைக்கும் பெண்கள் பற்றிய கவிதை அருமை. பாராட்டுக்கள் உமா!
ஆம் கீதா மனம் செருகிய காரணங்கள் உறக்கத்தில் கத்தி செருகி விடுகின்றன
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
சிறியதோ பெரியதோ உறக்கம் பிடுங்கும் கொள்ளையர் வீடுகளில் உலவிக்கொண்டேதானே இருக்கிறார்கள்-அனைவரின் அனுமதியோடும்;)வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கலையரசி .
கருத்துரையிடுக