ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

மேக உலா



உன்னில் குடியேறி 
உலகெலாம் நோக்கவேண்டும்...
பஞ்சுப்பொதியாய் 
அலையவேண்டும்...
தினம் 
பார்ப்பது நீதானா,
வேறு வேறு 
நீயா -என 
வடகோடி நட்சத்திரத்திடம் 
வினவ வேண்டும்....
நிலாமலரின் 
மணம் சற்று நுகரவேண்டும்.......
பிரபஞ்சக் குளிர்  குறைக்க 
சூரியச் சுள்ளி 
கொளுத்திக் காய்ந்தபடி 
புவியை 
அச்சுப்பிழை திருத்தவேண்டும்.....
நில் மேகமே.....
.
யாரங்கே 
நூலேணி கொண்டுவா .........

4 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

என்னிடமிருக்கும் நூல்களையும் இரவல் தருகிறேன். உருவாக்கப்படட்டும் ஒரு அழகிய நூலேணி. பற்றிக்கொண்டு நானும் வர தடையேதும் இல்லைதானே?

அழகிய கவிதைக்குள் புதைந்திருக்கும் ஏக்கம் ரசிக்கவைக்கிறது சக்தி.

ஞா கலையரசி சொன்னது…

நிலாவுடன் கண்ணா மூச்சி ரே ரே, காதடைப்பான் ரே ரே விளையாட வேண்டும் என எனக்கும் ரொம்ப நாளாய் ஆசை!
மேக உலாவில் கீதாவோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் உமா!

உமா மோகன் சொன்னது…

வாங்க கீதா .....உலகாயத்தொல்லைகள் துறந்து போவோம் புது உலகம்

உமா மோகன் சொன்னது…

பாட்ட எழுதி பட்டுன்னு இழுத்திட்டுப் போயிட்டீங்க கலை !
கண்டிப்பா...நீங்க இல்லாமலா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...