ஏப்ரல்13 அதீதம் இதழில் வெளியான கவிதை
மஞ்சள் மலர்
கொட்டும்
பாதையைத்
தாண்ட வேண்டியிருக்கிறது…
****************************
என் பாதணி ஒரு தடை ….
வெற்றுப் பாதங்களோ
அழுக்கும் வெடிப்புமாய் …
மெத்தென்று சிறிதாய்
மாற்ற வழியுண்டா
தெரியவில்லை..
கட்டைவிரல் நுனி
ஊன்றித் தாண்ட
சிறு தொலைவுமில்லை…
****************************
உதிர்ந்து
காற்றில் அலைந்து
என்முகம் மோதித்
தாண்டும் சருகு ,
ஆடைதொட்டு விலகி
உதிரும்
செம்பழுப்பு இலை
இரண்டும்
பரிகசித்துப் போனாலும்
பரவாயில்லை…
2 கருத்துகள்:
வசந்தகால சந்திப்புகளில் இப்படி அடிக்கடி நேரலாம். அத்தனைக்கும் இப்போதே மன்னிப்பு கேட்டுவிடலாம். கொட்டிக் கிடக்கும் பூக்கள் மிதித்துப் போக எனக்கும் சம்மதமில்லை.
அழகானக் காட்சிக்கவிதை.
ஆம்,பாதைமிருதுவாக இருக்க பூத்தூவி வரவேற்பதுகூட சரியில்லைதானே கீதமஞ்சரி.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
கருத்துரையிடுக