வியாழன், ஜூன் 21, 2012

விடையிலாக் காட்சி

 ஜூன்20 வல்லமையில் 



விடையிலாக் காட்சி 
சிலநாட்களாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது 
 
சுழித்தும் ,வளைத்தும்,
இழுத்தும் 
"ஆ "எழுதும் காட்சி!
 
எழுதுவது நான்தானா
எனத் தெரியாவிடினும் 
நான்போலவே....
 
எங்காவது "ஆ"கண்டுவிட்டால்,
கண்ணுக்கும் ,எழுத்துக்கும் 
இடையே உலவும் புகையாக 
"ஆ"உருவாகும் காட்சி,....
 
சிரத்தையோடும்,சிரமத்தோடும்,
உதடு மடித்தும்,
"ஆ"எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
 
"அ"எப்படிக் கற்றாய் ,
"இ "சிரமமில்லையா என்றெல்லாம் 
கேட்டுவிடாதீர்கள்.
 
அது குறித்த காட்சி 
ஏதுமிலாததால் ,
என்னிடம் விடையில்லை.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அ... ஆ ... அருமை ! நன்றி !

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழர்..தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும்

Revakisvary சொன்னது…

5th stanza padikiravaraikum... i was thinking to ask u the same question... but u defeated me in ur 6th stanza....I just wondered...

உமா மோகன் சொன்னது…

நன்றி ரேவகிச்வரி ...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...