செவ்வாய், ஜூன் 05, 2012

சருகு படர்ந்த கூடுகள்


மயில் நீலச்சேலை.
டிசைனர் ரவிக்கை,
பொருத்தமாய்த்தேடிவாங்கிய 
அணிகலன்கள் ,
செருகிய பூச்சரமும் 
ஒப்பனைப்பூச்சுகளும் ...
பொருத்தமும் ,திருப்தியும் 
கண்ணாடி மட்டுமன்றி 
உறவும்,நட்பும் மெச்ச ...
பெருமிதமாய்த்தான் இருந்தது....
 
எச்சில் இலை
எடுத்துப்போன 
பள்ளித்தோழியை.....

அடையாளம் காணும் வரை...!   

10 கருத்துகள்:

ஞா கலையரசி சொன்னது…

உண்மை தான். வாழ்க்கைப் போராட்டத்தில் பின் தங்கி விட்ட பள்ளித் தோழியைக் காணும் போது மனம் சொல்லொணாத் துயருருவதைத் தவிர்க்க இயலாது.
அதுவும் எச்சில் இலை எடுக்கிறாள் என்றால் சொல்லவே வேண்டாம்.

மனம் கவர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் உமா!

உமா மோகன் சொன்னது…

ஆம் கலையரசி எச்சில் மிட்டாய் பகிர்ந்தவளை நாம் இப்போது எப்படி அணுகுவோம்?

கீதமஞ்சரி சொன்னது…

கடைசி வரிகளை வாசிக்கும்போது மனம் திடுக்கிட்டுத் துடிக்கிறது. உணர்வுபூர்வமான காட்சி கண்ணில் விரிய... மனம் கரைகிறது.

உமா மோகன் சொன்னது…

ஆம் கீதா வாழ்க்கை இப்படியான திடுக்கிடல்களை வைத்துக்காத்திருக்கிறது

ramgopal சொன்னது…

காத்திரமான கவிதை வாழ்த்துக்கள். இது போன்ற கவிதைகள் இன்னும் நிறைய வர வேண்டும்.

உமா மோகன் சொன்னது…

தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும் நன்றி கோபி

வாழ்க்கையின் விரிவோ பதிவோ கவிதை ,.....

Revakisvary சொன்னது…

manadhai nerudum kavidhai...

உமா மோகன் சொன்னது…

வாழ்க்கையின் விரிவோ பதிவோ கவிதை ,.....நன்றி ரேவகிச்வரி

சிவஹரி சொன்னது…

வரிகள் வலிக்கச் செய்து விட்டன சகோ.

பகிர்ந்தமைக்கு நன்றி

உமா மோகன் சொன்னது…

நன்றி சகோதரரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...