அது அன்று பூத்திருந்தது ...
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப்
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம்
விழுந்த
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில்
என்ன கூவினான்
என்பதை-அந்த
நெடுஞ்சாலையோர அரளியால்
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை
அந்தச் செவ்வரளி நிறம்
அவனுக்குப் பிடிக்குமானால்
அல்லிவட்டத்தில்
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால்
எதையும் சொல்லாமல்
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.
6 கருத்துகள்:
வருந்த வைக்கும் கவிதை...
ஒரு மலரின் பார்வையிலிருந்து மரணத்தின் வீரியத்தைப் பிரதிபலிக்கும் வரிகள் கண்டு அதிசயிக்கிறேன். மலரின் கண்ணீர் மனம் தொடுகிறது. அருமை சக்தி.
மிக நன்றாக இருந்தது. கவியின் பார்வை ஒரு மலரிலும், வண்டிலும், புல்லில்லும் கூட இருக்கும் என்பதை அறிந்தேன்.
நன்றி தனபாலன் தோழர்
உண்மையில் பல இறுதி நொடிகள் பகிர்வு இன்றி முடிந்துவிடுகின்றன
என்ற விசனமே இக்கவிதையின் தொடக்கப்புள்ளி கீதா .பாராட்டுக்கு நன்றி
எங்கும் புலவன் வாழுகிறான் என்ற பழைய வரியை நினைவூட்டினீர்கள்
மாற முயல்கிறேன் கோபி
கருத்துரையிடுக