செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெகிழ வைத்தது...

Yaathoramani.blogspot.com சொன்னது…

இறுதி வரிகள் படித்ததும் சட்டென அதிர்ந்தேன்
கிழவி குறித்த வர்ணனை மிக மிக அருமை
மனம் தொட்டப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

சிறப்பான கவிதை.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி தனபாலன் தோழர்

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ரமணி சார்.நிச்சயம் முயல்கிறேன்

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...