வியாழன், ஜூன் 06, 2013

எனக்குத் தெரியாத நான்


அலைச் சலனத்தில்
துள்ளி நழுவும் சிறு மீனா...
மிதவைத் தெப்பத்தில்
சேர்ந்த குச்சியா....
அதையும் செலுத்தவல்ல
துடுப்பா ...

கரையோரம் நின்று
ஈரத்தில் ஊறும் வேரா ,
உதிரும் துளிரா ..
நீலமும் பச்சையுமிலா
நிறச் சேர்க்கையா ...
எங்கோ இருக்கிறேன் !
எங்கிருக்கிறேன் ....?
இருக்கிறேனா ...?

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு... அருமை...

G.M Balasubramaniam சொன்னது…


நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்துமே சிந்தனா சக்தி இல்லாதது. label-ல் ஆன்மா என்று குறிப்பிட்டு அறியாததைத் தேடி அலையும் சிந்தனை கொண்டவர் எனும் சந்தேகம் உங்களுக்கு சரியா.? abstract எண்ணங்களுக்குப் பொருள் காண எண்ணும்போது இப்படிக் கருத்திட வேண்டி உள்ளது. .

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...