புதன், மார்ச் 20, 2019

ஊருக்குப் போக வேண்டும்



அருநெல்லிக்காய் ,உப்பு,மிளகாய்த்தூள்
கொய்யா  
பெருநெல்லி,கமர்கட் 
,கடலை உருண்டை பாட்டில்களோடு 
சாக்கு விரித்து வெற்றிலை மெல்லும் 
சவுந்தரம் அத்தைக்கு  
முன்னூற்றைம்பது பேரக்குழந்தைகளை 
மேய்க்கும் வேலை இருந்தது 
அரசுப்பள்ளி வாசலில் அத்தனை 
பஞ்சாயத்துக்கும் நடுவில்தான் 
"பெத்த  யாவாரம் "
காசு கொண்டுவராதவன்  நாக்கைச் சுழற்றி 
மூக்கைத் தொட்டுக் காட்டலாம் 
கருப்பு முழியை மூக்குப்பக்கம் 
நிறுத்திக் காட்டுதல்  இன்னொரு வித்தை
அதிக கைத்தட்டல் வாங்குவோர்க்கு
ஓசித்தீனி ஒன்றுக்கு இரண்டாக 

வான்தொடும் மதிலுள்ள பள்ளியில் படிக்கும் 
மகளுக்கு இது ஒன்றும் நம்பும்படி இல்லை 
இதெல்லாம் ஸ்நாக்சா 
காசில்லாம யார் தருவா 
இவ்வளவு கூத்தடிக்க எது நேரம் 
அவநம்பிக்கையோடு உதடு பிதுக்கும் 
அவளிடம் 
இப்படிதான் வாழ்ந்தோமென்று 
எப்படிச் சொல்வேன்.

சவுந்தரம் அத்தை ..
எப்படியாவது என் மகளோடு 
 கோடை விடுமுறைக்கு வரும்வரை உயிரோடு இரு 

 -உமாமோகன்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...