பாசிநிறஅலைகள் பேரமைதி தளும்பிக்கிடந்த நதியோரம் அடியாழத்திலிருந்து ஒரு கை நீண்டுயர்ந்து பாசி விலக்கிச்சிரிக்கலாம் அலை புரளலாம் ஏதுமின்றி இம்முழு நிலவை வேறிடம் போகச்சொல்கிறது காற்று முகம்சுண்டி அடுத்த வாசல் நகர்ந்த ஏதிலிப்பெண்ணும் நிலாமகள் போலவே இறுகிய முகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக