ஒளிவட்டம்

கடவுள்
வந்திருக்கிறார்
என்றான் தோழன் ....
அவரோடு பேச்சுவார்த்தை
உண்டு என்பான்..!
உன் அருகில்தான்
இருந்திருக்க வேண்டும்
பிரத்யேக நறுமணம்
உன் ஆடைகளிலும்
சிறிது படிந்திருக்கிறது...
"கடவுச்சீட்டு வாங்க
அல்லவா போயிருந்தேன்"
"மறந்து போனாயா
அவர் -சர்வ வியாபி"
நிஜத்தில்
பதற்றம் தொற்றியது
யாரது...
செய்தித்தாளும் அரைத்தூக்கமுமாக
முனனால் நின்றவரோ...
ஒற்றைக்கால்
மாற்றி மாற்றி மடித்து
சாய்ந்து பேசிக்கொண்டே இருந்தவரா...
சகலரும் பார்க்க
கையூட்டு அளித்தவனை
முனனால் அழைத்தவரா ?
குமுறிப் பொங்கியவர்...?
சலனமின்றி புகார் கேட்ட அதிகாரி...?
ஏதும் அடையாளம் முன்பே
சொல்லக் கூடாதா -கடிந்தேன்...
"பரவாயில்லை
உன்னில் கூடத்தான்
படிந்துவிட்டாரே ....
பிறகு பார்க்கலாம் "
என்றபடி விரைந்துவிட்டான்...
பார்க்கலாம்
என்றது...என்னையா...?
    

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
இனி காண்போரிடத்திலெல்லாம் கடவுளைத் தேடக்கூடும். மனம் தொட்ட கருவும் கவிதையும். பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீதா .காலந்தோறும் தேடல் தொடர்கிறது
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thedal thodarattum.
chandru
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சந்துரு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்