செவ்வாய், பிப்ரவரி 07, 2012

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

9 கருத்துகள்:

Admin சொன்னது…

பெயரற்றுப் போகும் போது மனிதம் அஃறிணை ஆகிவிடுகிறது..அனைத்தும் பெயருக்கே நமக்கல்ல உண்மைதான்.
சரியாகச் சொன்னீர்கள்..
தொடருங்கள்..தொடர்ந்து வருகிறேன்.

உமா மோகன் சொன்னது…

நன்றி மதுமதி !அசை அசையாய்ப் பதிந்த பெயரை
அசைத்துப் பார்த்தாலே நாம் ஆடிப் போய்விடுவோமோ?

கீதமஞ்சரி சொன்னது…

அருமையா சொல்லியிருக்கீங்க சக்தி. வித்தியாசமான சிந்தனைக்குப் பாராட்டுகள். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

Riyas சொன்னது…

நல்லாயிருக்குங்க..

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா..

உமா மோகன் சொன்னது…

நன்றி ரியாஸ்

எஸ்.மதி சொன்னது…

வித்தியாசமான கவிதை என் வாழ்த்துகளும்
அறிமுகம் செய்த கவிஞர் மதுமதிக்கு அண்ணனுக்கும் என் நன்றியும்..

உமா மோகன் சொன்னது…

நன்றிமதி! மதுமதி தங்களுக்கும்...

பெயரில்லா சொன்னது…

Tris [url=http://yourmedicinehat.net/2009/05/30/superior-amino-2222-tabs-side-effects/]superior amino 2222 tabs side effects[/url] horsemen convincing [url=http://yourmedicinehat.net/2009/07/06/metformin-1000-g/]metformin 1000 g[/url] between rent [url=http://yourmedicinehat.net/2009/07/07/nfpa-for-sucrose-sigma-ultra/]nfpa for sucrose sigma ultra[/url] corrupted jerked [url=http://yourmedicinehat.net/2009/07/16/can-you-get-high-off-of-meperidine/]can you get high off of meperidine[/url] start chains [url=http://yourmedicinehat.net/2009/08/10/fibre-optic-cable-max-speed/]fibre optic cable max speed[/url] renewing slaughtering [url=http://yourmedicinehat.net/2009/09/08/how-periodontal-scalers-worlk/]how periodontal scalers worlk[/url] prosperity eat [url=http://yourmedicinehat.net/2009/09/10/carisoprodol-2444-imprint/]carisoprodol 2444 imprint[/url] times harnesses [url=http://yourmedicinehat.net/2009/10/07/bactroban-for-fungal-skin-infections/]bactroban for fungal skin infections[/url] damnedest stout [url=http://yourmedicinehat.net/2009/10/20/loz-skyward-sword-walkthrough/]loz skyward sword walkthrough[/url] core feast [url=http://yourmedicinehat.net/2009/11/25/side-effects-of-tapazole-medication/]side effects of tapazole medication[/url] defended immersed Goddess.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...