நேற்றைய நகர்வலத்தின்போது
அவளைக் கண்டேன் ..
அங்காடி மாடியிலிருந்து
அவள் முகம் தெரிந்தது ..
நீள்வகிடு
நெடுங்கோடாய்
நாசிநுனியில் நிறையும் முகம்!
அவள்..அவள்..
ஏதோ அறிமுகம்..
நகரவேண்டிய எதிர்முகம்
ஏறிட்டுத் தி..ரும்பிய
கணத்தில் ...
நெடுங்கோடு ...கடந்து விட்டது!
உறவா..நட்பா..பகையா..
பிரபலமா..
புகைப்படமா..
எங்கே..எப்படி...
பிடிபடாத விடை
மணலாய் உறுத்திய
உறக்கத்தின் நடுவே
தெளிந்தேன்...
எழுதப்படாத கவிதையின்
மூன்றாவது வரியில்
அவள் இருந்தாள்..!
அவளைக் கண்டேன் ..
அங்காடி மாடியிலிருந்து
அவள் முகம் தெரிந்தது ..
நீள்வகிடு
நெடுங்கோடாய்
நாசிநுனியில் நிறையும் முகம்!
அவள்..அவள்..
ஏதோ அறிமுகம்..
நகரவேண்டிய எதிர்முகம்
ஏறிட்டுத் தி..ரும்பிய
கணத்தில் ...
நெடுங்கோடு ...கடந்து விட்டது!
உறவா..நட்பா..பகையா..
பிரபலமா..
புகைப்படமா..
எங்கே..எப்படி...
பிடிபடாத விடை
மணலாய் உறுத்திய
உறக்கத்தின் நடுவே
தெளிந்தேன்...
எழுதப்படாத கவிதையின்
மூன்றாவது வரியில்
அவள் இருந்தாள்..!
4 கருத்துகள்:
அருமையான வரிகள், வாழ்த்துக்கள்
www.fasnidx.blogspot.com
மிக்க நன்றி!வருகைக்கும் வாழ்த்துக்கும்!
பல சமயங்களில் பலருக்கு நேரும் அனுபவமே
ஆயினும் பல சமயங்களில் அது பிடிபடாமலேயே போகும்
நீங்கள் கண்டுபிடித்த இடமும்
சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அழகு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்!அடையாளங்கள் அறியப்படாத
கனவினை மொழிபெயர்க்க வந்தமைக்கு நன்றி
கருத்துரையிடுக