பாலையின் அரும்பு

மருதாணிப்பூ
மணந்துகொண்டிருந்த பாதை
இன்று
வெறும் வெளிச்சம்
இறைந்து கிடக்க
வெம்மையின்
சுடுமணத்தைப்
பரப்பிக் கொண்டிருக்கிறது...
மெல்லடி வைத்துப்
பாடல் முனகியவண்ணம்
கடக்கவியலாதபடி !
கடும் முயற்சியில்
வரிகளை
நினைவில் இருத்துகிறேன்..
மருதாணிப்பூ
இல்லாவிடிலும்,
நாளை
ஒரு
சிறுமலர் -
அங்கே சிரிக்கலாம்...  

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
நம்பிக்கையில் நகர்கிறது வாழ்க்கைப்பயணம். கவிதை சொல்லும் கருத்து வெகுநன்று. பாராட்டுகள் சக்தி.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை அருமை ! நன்றி சகோதரி !
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம்பிக்கையின் மணம் மாறலாம்
மனம் மாறாமலிருத்தல் முக்கியமல்லவா கீதா
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை