மே 11 முகநூலில்

கரித்துண்டுபோல் கிடந்தன
எழுத்துகள்
தணலாக்க முடிகிறது உன்னால்
சொல்சொல் எனச்சொன்னதல்லோ
பிழை
*****************************************************
புரிஞ்சுதா புரிஞ்சுதா என்பார் பெரியப்பா
ஒவ்வொரு வரிக்கு நடுவிலும்
மொத்தமாகவே புரியவில்லை
எனச்சொல்லும் தைரியம் வந்தபோது
அவருக்கு எதுவும் புரியும் நிலையில்லை
*****************************************************************
கவனிக்காதது அலட்சியம் என்பாய்
கடந்து செல்வது திமிர் என்பாய்
நின்றால் எதிர்பார்ப்பு
நெருங்கினால் ஏக்கம் 
விலகினால் எரிச்சல்
எங்கிருந்தால் இயல்பு

********************************************************
வந்திருக்கவேண்டும் மழை
வாசல் திறந்திருந்தபோதே
குழந்தை விழித்திருந்தபோதே
மூடிய கதவுக்கு வெளியே
இப்போது
வெறும் சலசலப்பு

*********************************************************
ஒளி உறுத்தும்போது
இருள் பிடிக்கிறது
தெரியும்
இருளும் உறுத்தும்

************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்