ஞாயிறு, ஜூன் 26, 2016

வில்லாய் வளையும்


குறுகுறுப்புடன் காத்துக்கிடந்தார்கள்
எப்படி வரப்போகிறது
எவர்வழி ,எந்நேரம்,எவ்வளவு ....
கேள்விகளின் திகைப்பு குறித்து
யாருக்கும் வெட்கமில்லை
பூடகம் என்ன வேண்டியிருக்கிறது
உண்ணும் வாய்ப்புக்கான ஐயம் இன்றி
ஐயம் இட விளக்கணைப்பார்
எனப் பேச்சுண்டு
மீண்டும் எரிவது விளக்கா கூரையா
பாருங்கள்
மூக்குத்தியோ,கறிச்சோறோ,குடமோ
சாராயமோ
உங்கள் அழுக்கு ஆடைகளுக்காக
வானம் பேச்சுவழக்கில் ஆனதுதானோ
மானம்

மே 10 2016 முகநூலில் 

கருத்துகள் இல்லை:

புகைப்படத்திலிருந்து ஒலிக்கும் குரல்

  ஒருதலைராகம் நாயகிபோல வி"கழுத்து வைத்த ரவிக்கையுடன் நால்வருமாக முழங்கையோரம் மறுகையைச் சார்த்திக்கொண்டு நின்ற படம் இன்று கிடைத்தது ஒற்ற...