ஞாயிறு, ஜூன் 26, 2016

மே 10 முகநூலில்

அதீதத்தில் வந்த சமீபக் கவிதை
சுமந்தாய்
சுமந்தேன்
சுமப்பார்கள்
சிற்றெறும்பின் முதுகில்
முதலை ஏறி அமர்ந்தபடி
நட..நட என்கிறது
அட..அட..
என்ன திறமையான எறும்பு
குரல் கேட்டவர் இதை வாசிக்கிறார்
மற்றவர்..
அவர்தான் நசுங்கிவிட்டாரே
அவர் முதுகு முதலைதான்
இவர் முதுகில்..
இங்கிருந்து பார்க்கையில்
அதுவே பாறாங்கல்
பொறுப்பு என்பீர்கள் உங்கள் மொழியில்-

கருத்துகள் இல்லை:

மேசைக்கு வந்த பூமி

  சின்ன வாழ்க்கைதான் எவ்வளவு சின்னதென்றால் இதோ மச்சுப்படி இறங்கும் அணில் கடித்த கொய்யா அந்தப் பச்சைக்குள்ளான பழரோஸ் ரோஸ் ஓரத்தில் ஏறிக் கொண்...