ஞாயிறு, ஜூன் 26, 2016

என்னை என்னவென்று சொல்லிக்கொள்வது


நெருப்பாக இருக்க முடிவுசெய்கையில்
ஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது
பனிப்பாளமாகக் கிடக்கையில்
மேலிருந்து உச்சிவெயில்
கீழிருந்து காட்டுத்தீ
சகஹிருதயர்களை அடையாளம் கண்டால்
அவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது
தனிமையே தீர்வென்கையில்
நான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம்
எனை என்னசெய்வாய் வேய்ங்குழலே
சங்கீத ஞானமில்லா வெறும்
ஊதாங்குழலாகிக் கிடக்கும் உன்னிடம்
நிச்சயம் கிடைக்கவேண்டும் விடை

கருத்துகள் இல்லை:

புகைப்படத்திலிருந்து ஒலிக்கும் குரல்

  ஒருதலைராகம் நாயகிபோல வி"கழுத்து வைத்த ரவிக்கையுடன் நால்வருமாக முழங்கையோரம் மறுகையைச் சார்த்திக்கொண்டு நின்ற படம் இன்று கிடைத்தது ஒற்ற...