மே 14 முகநூலில்

புல்வெளியில் இலையும்
பூவும் உதிர்வதைச்
சொல்கையில்கூட
உங்களால்
காய்ந்த புல்லைக்
கற்பனையும் செய்ய இயலவில்லை.
எல்லாம்
சிறப்பாக இருக்கிறது
மகிழ்ச்சி

********************************************
எங்கள் கதாநாயகர்கள்தான்
எவ்வளவு துன்புற்று
விட்டார்கள்
நைந்த முந்தானைகள்
நனையும் காலம்வரை
சுபிட்சம்

*************************************************
எங்கிருந்தாவது 
ஒரு சுசீலா பாடல்
ஒலித்தால்
யாரோ சூடியிருக்கும்
சாதிமல்லியின் சுகந்தம்
கடந்தால்
மெல்லிய குரலில்
ஒரு பூனை மியாவினால்
களுக்கென ஒரு மழலை
சிரித்தால்
அட
வீறிட்டழுதால் கூடத்தேவலாம்
இந்த நொடி உடைந்துவிடும்

************************************************
கோத்துக் கொள்ள
நீண்ட கரங்கள்
தட்டையாக இருக்கிறதா
பஞ்சு போலிருக்கிறதா
மெல்லியதா
கொடுத்துச் சிவக்குமா
பரஸ்பர பரிசீலனையில்
நடுங்குவதைக் கவனியாது
இப்புறமும் அப்புறமும்
நீண்ட படியே..

******************************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்