புதன், ஜூன் 11, 2014

புன்னகைக்கு மணமுண்டா ..



உனக்கு வியப்போ ,எரிச்சலோ,
வரலாம்....
ஆனாலும்,இதற்கு விடை தா....
ரூபியின் புன்னகையில் 
சமையலறை தாளிப்பு வாசமும்,
அம்மாவின் புன்னகையில் 
கவலைகளின் கசங்கிய வாசமும்,
தேவாவுக்கு இழப்பின் 
அழுகல் வாடைச் சிரிப்பும்,
ரஞ்சியிடம் பொறாமையின் 
மழுப்பலான குப்பைநெடியும் ,
உணர்ந்தேன்  என்றாயே....
என் இதழ் உதிர்ப்பதில் 
நீ உணர்ந்ததென்ன 

1 கருத்து:

ramgopal சொன்னது…

சபாஷ். ஒரே நாளில் 4 கவிதைகள். நிறைந்த மனது, சுகமாய் கழிந்த பொழுதுபோலும் நேற்று (11.06.2014).

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...